Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM

வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் - பராமரிப்பு பணியால் மூடப்படும் ரயில்வே ‘கேட்’ பாதைகள் :

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில்வே ‘கேட்' பாதைகள் மூடப்படுவதால் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் 8 ரயில்வே கடவு பாதைகளில் 13-ம் தேதி (நாளை) முதல் 21-ம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் ரயில்வே கடவு பாதையை மூடி வைக்க உள்ளதால், பொதுமக்கள் மாற்றுப்பாதையில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘13-ம் தேதி (நாளை) புரம்-பென்னாத்தூர் ரயில் கடவு பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் அரியூர் மேம்பாலம் வழியாகச் சென்று அடுக்கம்பாறை செல்லும் சாலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வரும் 14-ம் தேதி கழிஞ்சூர்-திருமணி லத்தேரியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வரும் 15-ம் தேதி காட்பாடி-வேலூர் கன்டோன்மென்ட் கடவுப் பாதையும், வரும் 16-ம் தேதி அடுக்கம்பாறை-பென்னாத்தூர் கடவுப் பாதையும், வரும் 17-ம் தேதி ஆற்காடு-கண்ணமங்கலம் கடவுப் பாதையும், வரும் 19-ம் தேதி அல்லாபுரம்-வேலூர் கடவுப் பாதையும், வரும் 20-ம் தேதி கணியம்பாடி-வேலூர் கடவுப் பாதையும், வரும் 21-ம் தேதி வசந்தபுரம்-வேலூர் கடவுப் பாதையும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் மூடப்படுகின்றன. மேற்கண்ட நாட்களில் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் பயணிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x