Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM
சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 177 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, இளையான்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட 7 இடங் களில் 11 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா தலைமையில் நீதிபதிகள் கருணாநிதி, சத்தியதாரா, சரத்ராஜ், சுந்தரராஜ், உதயவேலவன், இனியா கருணாகரன், பாரததேவி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
109 குற்றவியல் வழக்குகள், 56 காசோலை மோசடி வழக்குகள், 109 வங்கிக் கடன் வழக்குகள், 82 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், 21 குடும்ப பிரச்சினை வழக்குகள், 145 சிவில் வழக்குகள் என 522 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 176 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
இதன்மூலம் ரூ.1.92 கோடி மனுதாரர்களுக்கு கிடைத்தன. மேலும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யாத வழக்குகளில் 2 பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, ஒன்று தீர்க்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT