Published : 09 Jul 2021 03:15 AM
Last Updated : 09 Jul 2021 03:15 AM
கிருஷ்ணகிரியில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தார்.
தமிழக காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும், குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்காகவும், குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காணவும் புதிதாக பெண்கள் உதவி மையம் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டது. இதற்கான பயிற்சி முகாம் நேற்று எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. பயிற்சி முகாமினை எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்து கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையத்திற்காக தலா 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பயன்பாட்டிற்காக மடிகணினி, இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணம் தொடர்பான தகவல்கள் பெண்கள் உதவி மையத்திற்கு வந்தவுடன், உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்று அதனை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இப்பயிற்சி முகாமில் கூடுதல் காவல்துறை இயக்குநர் சீமாஅகர்வால், கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி ஆகியோர் காணொலி மூலம் சிறப்புரையாற்றினார்கள்.
இதில், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பாதுகாப்பு அலுவலர் தங்கமணி, தனியார் அமைப்பு நிர்வாகி சர்வகலா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை உதவி பேராசிரியரும், உளவியளால ருமான மருத்துவர் கோபி, மகளிர் திட்ட உதவி அலுவலர் பிரபாகரன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திருநந்தன், மாவட்ட குழந்தைகள் நல குழும அலுவலர் சரவணன், ஆகியோர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜூ நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT