Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM
ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி வந்தவரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்தார். இவரை ஜாமீனில் விடுவித்து, உயர் சிகிச்சைக்கு வழி வகை செய்யாததே உயிரிழப்புக்கு காரணம் என மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி பாலசுப்பிரமணியன், விசிக மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி, மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்கம் பழனிராசன், தமிழ் தேச முன்னணி அயனாவரம் முருகேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன் ஆகியோர் பேசினர். இதேபோல, கும்பகோணம், பட்டுக்கோட்டையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் நாகை மாலி எம்எல்ஏ, திருமருகல் ஒன்றியச் செயலாளர் ஜெயபால், நாகை நகரச் செயலாளர் மணி, விசிக மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரங்கராஜன், வெற்றிச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் அன்வர் மற்றும் பல்வேறு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தேசிகன், விடுதலைச் சிறுத்தைகள் அருள், மதிமுக சோமு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கபியூர் ரகுமான், அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஷேக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரத் தலைவர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், விசிக மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT