Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM
ஜன சங்கத்தின் நிறுவனரான சியாம் பிரசாத் முகர்ஜியின் 120-வது பிறந்தநாளையொட்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவி வழங்குதல், மரக்கன்று நடுதல் மற்றும் படத்திறப்பு விழா நிகழ்வுகளை, அக்கட்சியினர் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில், பாஜக அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர் பிரிவின் சார்பில், நடந்த கொடியேற்று விழாவுக்கு அமைப்புசாரா பிரிவின் மாவட்ட தலைவர் மோகன்குமார் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் பங்கேற்றார். 26 இடங்களில் படத்திறப்பு செய்து மரியாதை செலுத்துவதும், 40 இடங்களில் கொடியேற்று விழாவும் நேற்று நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT