வியாழன், நவம்பர் 07 2024
Last Updated : 07 Jul, 2021 03:13 AM
Published : 07 Jul 2021 03:13 AM Last Updated : 07 Jul 2021 03:13 AM
காரைக்குடி அருகே காந்தி தெருவில் உள்ள குடோனில் குட்கா, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சிவகங்கை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் போலீஸார் உதவியுடன் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான ஒரு டன் எடையுள்ள குட்கா, புகையிலைப் பொருட்கள் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரவிச்சந்திரன் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT