Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM
விழுப்புரத்தில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102-ஐ கடந்துள்ளது. டீசல் விலையும் ரூ. 100-ஐ தாண்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாலைமறியலில் ஈடுபட வந்த தேமுதிகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT