Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனை களில் வழங்கப்படும் உணவின்தரத்தை உயர்த்த வேண்டுமென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, கட்சியின் திருப்பூர் மாவட்டசெயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில், "கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கும்உணவின் தரத்தை உயர்த்த வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்துநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (திருப்பூர் மாவட்டம்) சார்பில்சென்னை உயர் நீதிமன்றத்தில்கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்து,கரோனா தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு பொது நல வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் சுகாதார கட்டமைப்பைமேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதேபோல, அரசு மருத்துவமனைகளில் தரமான உணவுவழங்க வேண்டியது அவசியம். பணக்காரர்களுக்கு மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டி யுள்ளது. இதுதொடர்பான அரசின்நிலைப்பாட்டை 4 வாரகாலத்தில் அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT