Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் - தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட(பொ) அலுவலர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் 9,293 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 8321 மனுக்கள் இணையதளம் மூலம் வரபெற்றது. இதில், 1366 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

1811 மனுக்கள் நிராகரிக்கப் பட்டு, 5144 மனுக்கள் தொடர் புடைய துறைகளில் பரிசீலனையில் உள்ளன. நிராகரிக்கப்பட்ட மனுக்கள், மறு பரிசீலனைக்காக தொடர்பு துறைகளுக்கு மீண்டும் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 363 நபர்களுக்கு ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சமூகபாது காப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி, திட்ட இயக்குநர் பெரியசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x