Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

பொள்ளாச்சி/திருப்பூர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில், பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் தலைமை வகித்தார். அக்கட்சியின் தாலுகா கமிட்டி உறுப்பினர் சேதுராமன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிர்வாகி ரா.மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபு, சிபிஐ கட்சியின் வட்டார பொறுப்பாளர் வெங்கடாச்சலம், வட்டார செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து வந்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமை வகித்தார்.

திருப்பூர் தெற்கு ஒன்றியக் குழு சார்பில் 17 இடங்கள், தெற்கு மாநகர குழு சார்பில் 11 இடங்கள், அவிநாசியில் 25 இடங்கள், பல்லடத்தில் 8 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

உடுமலை

உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் மா.கம்யூ., விசிக, இ.கம்யூ., கட்சிகளின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலையில் எஸ்.ஆர்.மதுசூதனன், தண்டபாணி, மடத்துக்குளத்தில் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x