Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM
செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்துத் தர வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலப்பேரவை தீர்மானம் நிறைவேற்றி, தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலப்பேரவையின் அவசரக் கூட்டம் தலைவர் அர.தங்கராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. செயலாளர் மா.பாலகிருஷ்ணன், பொருளாளர் ராமச்சந்திரன், சட்ட ஆலோசகர் வெ.ஜீவக்குமார், செய்தி தொடர் பாளர் பழனியப்பன், இணைச் செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மதுரை தோப்பூரில் மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையுடன், கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசை கேட்டுக்கொண் டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏற்கெனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மத்தியக் குழுவும் பார்வையிட்டு சென்றுள்ளது குறிப் பிடத்தக்கது. எனவே, முன்னுரிமை அடிப்படையில் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்துத் தர தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.
செங்கிப்பட்டி அருகில் திருச்சி விமான நிலையம், ரயில் நிலையம், சிறப்பான சாலை, தண்ணீர் வசதி போன்றவை உள்ளன.
இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமில்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும் பேருதவியாக இருக்கும். எனவே, செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்து வமனையை நிறுவ மத்திய அரசை தமிழக முதல்வர் வற்புறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், அது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனுவாக அனுப்பப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT