Published : 27 Jun 2021 03:14 AM
Last Updated : 27 Jun 2021 03:14 AM

திண்டிவனத்தில் தொழிற்பேட்டை அமைந்தால் - 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் : அமைச்சர் மஸ்தான் தகவல்

செஞ்சி அருகே பாலப்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியை சீரமைப்பு செய்து தண்ணீர் விநியோகத்தை அமைச்சர் மஸ்தான் தொடங்கி ஆய்வு செய்தார். அருகில் ஆட்சியர் மோகன் உள்ளார்.

விழுப்புரம்

செஞ்சி அருகே பாலப்பட்டு கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார் பில் ரூ. 4.60 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி மற்றும் பொதுநிதி திட்டத்தின் கீழ்ரூ. 4.66 லட்சம் மதிப்பீட்டில் சின் டெக்ஸ் டேங்குகள் பழுது நீக்கம் செய்தல் பணியினை அமைச்சர் மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் பங்கேற்று பேசியது:

2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி திண்டி வனத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அறிவித்தார். கடந்த ஆட்சியின் போது சட்டமன்றத்தில் இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தி பேசினேன். தேர்தல் பிரச்சாரத்திற்காக செஞ்சி வந்த முதல்வர் ஸ்டாலின், திண்டிவனத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட திண்டிவனத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார். தொழிற்பேட்டை அமைந்தபின் நேரடியாக 10 ஆயிரம் பேரும், மறைமுகமாக 25 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் இப்பகுதிமக்களின் வாழ்வு மேம்படும் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து தென்புதுப் பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

செஞ்சி ஒழுங்குமுறை விற் பனைக்கூடத்தில் வடிகால் வாய்க் கால் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் மோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து சத்தியமங்கலம் கிராமத்தில் ரூ. 21.8லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையினை ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x