திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 27 Jun, 2021 03:14 AM
Published : 27 Jun 2021 03:14 AM Last Updated : 27 Jun 2021 03:14 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மைதானம் அருகே, வேப்பமரத்தில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த போலீஸார் உடனடியாகச் சென்று சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் சிவகாசி அருகே உள்ள வடபட்டி கிராமத்தைச் சேர்ந்த வெயிலுமுத்து (30) என்பது தெரிய வந்தது. மேலும் அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து, சூலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT