Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM
திருப்பூர் அம்மாபாளையம் ராக்கியாபாளையம் சாலை கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அனுப்பர்பாளையம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் முன் பகுதியில், இருக்கும் இரண்டு வீடுகளை மாத வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டில், கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேச நாட்டின் காஜ்லா பகுதியை சேர்ந்த சிமுல் காஜி (29) என்பவர், ராக்கியாபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், வீடு வாடகைக்கு கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.
திருப்பூரில் வாடகைக்கு குடியிருக்கும் வெளிநாட்டு நபர்களின் அடையாள அட்டையாக பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பெற்று கொள்வது வழக்கம். ஆகவே பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்களை வழங்கும்படி மணிகண்டன் கேட்டுள்ளார். அவை பனியன் நிறுவனத்தில் இருப்பதாகவும், கரோனா தொற்று காலத்தால் நிறுவனம் மூடியுள்ளதாகவும், தற்போது தரமுடியாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஆவணங்களை தராமல் வீட்டில் குடியிருந்து வந்தார்.
அவருடன் வங்கதேச நாட்டைச் சேர்ந்த சைபுல் இஸ்லாம் (40), மன்னா முல்லா (31) ஆகியஇருவரும் தங்கியும் உள்ளனர்.இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், இரண்டு மாதங்களாகியும் ஆவணங்கள் கொடுக்காததால், மணிகண்டன் நேற்று முன் தினம்வீட்டுக்கு சென்று, சிமுல் காஜியிடம்ஆவணங்களைக் கேட்டுள்ளார்.
அப்போது, இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டை கொடுத்தார். இதனை பார்த்து மணிகண்டன் அதிர்ச்சியடைந்தார். வங்கதேசத்தை சேர்ந்த நபருக்கு எப்படி மேற்குவங்க மாநில முகவரியில் ஆதார் கார்டு இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
மேலும் வங்கதேசத்தில் இருந்து வந்ததற்கான பாஸ்போர்ட் கொடுங்கள் என மணிகண்டன் அவர்கள் மறுத்துள்ளனர். இதில்அவருக்கு சந்தேகம் எழுந்து வீட்டை காலி செய்யுமாறு கூறினார். அப்போது வாடகையை மாதாமாதம் சரியாக தந்துவிடுகிறோம். பிறகு எதற்கு வீட்டை காலி செய்யச் சொல்கிறீர்கள் எனக் கேட்டு மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பாக சம்பவ இடத்துக்கு திருமுருகன் பூண்டிபோலீஸார் சென்று விசாரணைமேற்கொண்டனர். இதையடுத்துபோலீஸார் அவர்களை பிடித்து அனுப்பர் பாளையம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்ததில்,அவர்கள் முறைகேடாக இங்குதங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து போலி ஆதார் அடையாள அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். சிமுல் காஜி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவும், சைபுல்இஸ்லாம் மற்றும் மன்னா முல்லாஆகியோர் கடந்த பல ஆண்டுகளாகவும் திருப்பூரில் தங்கியிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, முறைகேடாகதங்கியிருந்தது தொடர்பாக வெளிநாட்டினர் தடை சட்டம், கொலை மிரட்டல் உட்பட 7 பிரிவுகளின்கீழ், திரு முருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT