Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM
விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்தஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஆரணிஎம்பி விஷ்ணுபிரசாத் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், அரசூர், எல்லீஸ்சத்திரம், ஜக்காம்பேட்டை ஆகிய 6 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் ஆகியுள்ளது. இவற்றில் கூட்டேரிப்பட்டில் ரூ.33.50 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடித்து மேம்பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.
திண்டிவனம் - திருவண்ணாமலை சாலை விரிவாக்கப்பணிகளை மீண்டும் தொடக்க தமிழக முதல்வர் மற்றும் மத்திய ரயில்வேத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்.
திண்டிவனம் - நகரி இடையே 120 கி.மீ. தூரத்தில் புதிய ரயில் பாதை திட்டத்திற்காக ஆந்திரா மாநிலம் நெல்லூரில் நில ஆர்ஜித பணிகள் முற்றிலும் முடிந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 கிராமங்களில் நில ஆர்ஜித பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வட்டாட்சியரை நியமித்து பணியை தொடங்க வேண்டும். என்றார்.
இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் சிவாஜி பதிலளித்து பேசுகையில், “கூட்டேரிப்பட்டில் ஆகஸ்ட் மாதத்தில் மேம்பாலப் பணிகள் தொடங் கப்படும். அதுபோல் திண்டிவனம் - திருவண்ணாமலை சாலை விரிவாக்கப் பணி, திண்டிவனம் - நகரிபுதிய ரயில் பாதை திட்டப் பணி களையும் மேற்கொள்வதற்கு நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முன்னதாக, மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பான மனுவை ஆட்சியர் மோகனிடம் விஷ்ணுபிரசாத் எம்.பி அளித்தார். அப்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT