Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் 8 பேர் உயிரிழப்பு :

விழுப்புரம்/கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 168 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 57,078 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 245 பேர் உட்பட 54,685 பேர் சிகிச்சைக்கு பின்வீடு திரும்பியுள்ளனர். தற்போது1,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 8 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 739 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 41,946 பேருக்கு தொற்று ஏற்பட்டடது. இதையும் சேர்த்து நேற்று 228பேர் உட்பட 40,760பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 326 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 26,248 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 447 பேர் உட்பட 24,732பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 5 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 190 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x