Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM

வேலூர், அரியூர் பகுதிகளில் - இன்று முதல் ஜூலை 3-ம் தேதி வரை மின் நிறுத்தம் :

வேலூர்

வேலூர் மின்பகிர்மான வட்டத் துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் மின்பாதை பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால் ஜூன் 24-ம் தேதி (இன்று) முதல் ஜூலை 3-ம் தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை தினசரி 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

அதன்படி. ஜூன் 24-ம் தேதி இன்று (வியாழக்கிழமை) ஆரணி ரோடு, எஸ்.எஸ்.கே.மானியம், கொசப்பேட்டை, கஸ்தமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், பென்னாத்தூர், ஊசூர் பிரதான சாலை, வீராரெட்டிப் பாளையம், அரியூர், ஊசூர், சிவநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஜூன் 25-ம் தேதி (வெள்ளிக் கிழமை) வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, சுண்ணாம்புக்கார தெரு, மெயின் பஜார், சித்தேரி, கொல்லைமேடு, கணேசபுரம், சிறுகளம்பூர், சலவன்பேட்டை, நரசிங்கபுரம், காமராஜர் நகர், லட்சுமிபுரம், திருவள்ளுவர் நகர், அரியூர், புதூர், புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஜூன் 28-ம் தேதி (திங்கள் கிழமை) சின்னதெள்ளூர், ஊசூர் குளத்துமேடு, பென்னாத்தூர் பிரதான சாலை, சின்னசேக்கனூர், காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஜூன் 29-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) கென்னடி பாளையம், பாப்பான்தோப்பு, மலையடிவாரம், கே.ஜி.நகர், நேருநகர், வசந்தபுரம், நேதாஜி விளையாட்டு மைதானம், டிட்டர் லைன், அண்ணாசாலை, ஜமீலாபாத்காலனி, புரம், உமாபதிநகர், அம்மையப்பன் நகர், ரயில்வே கேட் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஜூன் 30-ம் தேதி (புதன்கிழமை) உமாபதிநகர், அம்மையப்பன் நகர், நல்லான்பட்டரை ஆகிய பகுதிகளிலும், ஜூலை 1-ம் தேதி (வியாழக்கிழமை) அரியூர் குப்பம், சின்ன அகமேடு, முருக் கேரி பகுதிகளிலும் ஜூலை 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொல்லைமேடு, புரம், அரியூர் பகுதிகளிலும், ஜூலை 3-ம் தேதி (சனிக்கிழமை) புதுமைநகர், தேவராஜ் நகர், அண்ணாநகர், மலைக்கோடி, ஆவாரம்பாளையம்,  புரம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதி களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என வேலூர் மின் கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x