Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM
கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட 8 வட்டங்களில் வசிக்கும் 301 கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருட் களை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 16 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். திருவண்ணா மலை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், கிருஷ்ணகிரி உதவி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
301 பேருக்கு ரூ.12.04 லட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகை மற்றும் 16 வகையான மளிகைப் பொருட்களை ஆட்சியர் வழங்கி பேசியதாவது:
மாவட்டத்தில் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி உட்பட 8 வட்டங்களிலும், 301 நபர்களுக்கு கரோனா கால நிவாரண உதவித் தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 16 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு நாளொன்றுக்கு 1,200 உணவு பொட்டலங்கள் வீதம் 36 நாட்க ளுக்கு மொத்தம் 43,200 உணவு பொட்டலங்கள், தலா ரூ.25 வீதம் மொத்தம் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தளர்வுகள் நீக்கப் பட்டு பிறகு அர்ச்சகர்கள், பூசாரி கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள், பக்தர்களிடம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களையும், பக்தர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT