Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM
உளுந்தூர்பேட்டை வட்டம் பிடாகம் எனும் எலவனாசூர்கோட்டை ஊராட்சியில் நஞ்சை விளை நிலங்களை மனை பிரிவுகளாக மாற்றி சிலர் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு, விளை நிலங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் எலவனாசூர் கோட்டை ஊராட்சியில் ஏரிக்கு அருகில் உள்ள ஒரு ஏக்கர் நஞ்சை விளை நிலத்தை வீட்டு மனைகளாக விற்பனை செய்துள்ளனர். வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்பட்ட இடத்தை பதிவுசெய்ய வருவாய்த் துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவ்விடத்தை பதிவு செய்ய முடியாமல் மனைப்பிரிவை வாங்கியவர்கள், மனைக்காக கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு, நில உரிமையாளரிடம் கேட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக வருவாய் துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், "எலவனாசூர்கோட்டையில் ஏரிக்கு அருகேவுள்ள நஞ்சை நிலத்தை வீட்டு மனைப் பிரிவுகளாக மாற்ற நில உரிமையாளர் வருவாய் கோட்டாட்சியரிடம் விண் ணப்பித்துள்ளார்.
திருக்கோவிலூர் கோட்டாட்சியரும், அவ்விடத்தை பார்வையிட்டுள்ளார். ஏரிக்கு அருகில் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து மனை அமைக்கப்பட்டுள்ளதால், வீட்டு மனை பிரிவாக மாற்ற மறுத்து
விட்டார். இதையறிந்த வீட்டு மனை வாங்கியவர்கள், தற்போது நில உரிமையாளிடம் பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர். வீட்டு மனைக்கு அருகிலேயே ஏரி உள்ளதால், அங்கு மனைபிரிவு அமைக்க முடியாது. எனவே நஞ்சை நிலத்தை புஞ்சை நிலமாக திருத்தம் செய்து தரும்படி விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "நஞ்சை நிலத்தை வீட்டுமனை யாக மாற்றும் அதிகாரம் ஆட்சியருக்கு மட்டுமே உண்டு. சர்ச்சைக்குள்ளான விளைநிலம் ஏரிக்கு அருகே, நீர்வழிப் பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதால், வீட்டு மனை யாக மாற்ற வாய்ப்பில்லை" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT