Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் 7 பேர் உயிரிழப்பு :

கடலூர்/கள்ளக்குறிச்சி/விழுப்புரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 211பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும்சேர்த்து இதுவரை 56,339 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 482 பேர் உட்பட இதுவரை 53,614 பேர் சிகிச்சைக்கு பின்வீடு திரும்பியுள்ளனர். தற்போது1,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 7 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 714 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 25,676 பேருக்கு தொற்று ஏற்பட் டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 41,504பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 790 பேர் உட்பட 39,549 பேர்சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள் ளனர். தற்போது 1,634 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x