Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM
தேசிய தூய்மைப் பணியாளர்கள் பணி புரியும் இடத்தில் ஏற்படும் பிரச்சினைகள், பாதுகாப்பு குறைபாடுகளை எந்தவித தயக்கம் இல்லாமல் 14420 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசும்போது, ‘‘தூய்மைப் பணியாளர்களுக்கு கல்வி, மருத்துவ வசதி, குடியிருப்பு வசதிகள், ஊதியம் மற்றும் கரோனா தொற்று காலத்தில் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்டவை அளிக்க வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி களில் தூய்மைப் பணியாளர்கள் ஊதியம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். காவலர்கள், மருத்துவர்களைப் போல் தூய்மைப் பணியாளர்களும் முக்கியமான முன்களப் பணியாளர்கள் ஆவார்கள். அவர்களுக்கு, கரோனா தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பதற்கான வீடுகளை ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர் களுக்கு வழங்கப்படும் ஊதியம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு வரவு வைக்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில், ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி இறந்த தொழிலாளி ரமேஷ் குடும்பத்தின ருக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான காசோலையை தூய்மைப் பணி யாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் வெங்கடேசன் கூறும்போது, ‘‘தூய்மைப் பணியாளர்கள் பணி புரியும் இடத்தில் ஏற்படும் பிரச்சினை கள், பாதுகாப்பு குறைபாடுகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் 14420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும். மனிதர்களால் மலம் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலை யில் அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். தூய்மைப் பணியாளர்கள் நவீன இயந்திரங்களை தூய்மைப்பணிகளில் ஈடுபடுத்திட நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று முடிந்ததும் அனைத்து மாவட்டங்களிலும் தூய்மைப் பணியாளர்களின் ஆணையத்தின் சார்பில் முகாம் கள் நடத்தப்பட உள்ளன. தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டுமில்லாமல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந் திருந்தால் அவர்களுக்கும் ரூ.25 லட்சம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT