Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கரோனா நிவாரணம் :

உதகை

உதகை மாரியம்மன் கோயில்வளாகத்தில் அர்ச்சகர்கள் 8 பேர் மற்றும் பூசாரிகள் 8 பேர் என 16 பேருக்கு தலா ரூ.4,000 கரோனா கால நிவாரண உதவித்தொகைக் கான காசோலை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்களை வனத்துறை அமைச்சர்கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சர்கள் உட்பட இதர பணியாளர்களுக்கு கரோனா கால நிவாரண உதவித்தொகையாக தலாரூ.4,000 வழங்கப்படுகிறது. இந்த கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணையாக தலா ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அர்ச்சகர்கள் மற்றும்பூசாரிகளுக்கு ரூ.4,000 கரோனா கால நிவாரண உதவித்தொகைக் கான காசோலை, 10 கிலோஅரிசி மற்றும் சர்க்கரை 500 கிராம்,துவரம் பருப்பு 500 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், கடலைப்பருப்பு 500 கிராம், மாவு, மிளகாய் தூள், புளி, கடுகு,வெந்தயம், சீரகம், மிளகு, மஞ்சள் தூள்,எண்ணெய், அப்பளம் ஆகிய 15வகை மளிகைப்பொருட்கள் வழங்கப் படுகின்றன.என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x