Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் இன்று (19-ம் தேதி) முதல் 10 நாட்களுக்கு தினமும் 3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அத்தியாவசிய பராமரிப்பு பணிகளான பழுதான மின் கம்பங்களை மாற்றுதல், சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டுதல், உயர் திறன் கொண்ட கம்பிகளை மாற்றுதல், இலுவை கம்பி சரி செய்தல், தொய்வான கம்பிகளுக்கு இடையில் கம்பம் நடுதல் மற்றும் மின் மாற்றி ஏபி சுவிட்ச் சரி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, பாகலூர், கெம் பட்டி, ஜூஜூவாடி, சூளகிரி, உத்தனப்பள்ளி, சிப்காட் பேஸ், நாரிகானபுரம், தேன்கனிக் கோட்டை, ராயக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், தளி, கெலமங்கலம், ஓசூர், மின்நகர், பேரிகை, அஞ்செட்டி, மத்திகிரி, கல்லாவி, மத்தூர் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை 3 மணி நேரம் மட்டும் மின்நிறுத்தம் செய்யப்படும். இதற்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT