Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM
கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை நீடிக்கிறது. இதனால் தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலைப் பகுதியில் பெய்த மழையால் மூல வைகையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் வைகை அணைக்கு விநாடிக்கு 563 கன அடி நீர்வரத்து உள்ளது. நீர்மட்டம் 66.5 அடியை எட்டி உள்ளது. 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் 110 மிமீ. மழையும், தேக்கடியில் 39 மிமீ. மழையும் பதிவானது. இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 2, 808 கன அடி நீர் வருவதால், நீர்மட்டம் 132 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT