Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே விளைநிலங்களில் எரி வாயு குழாய்கள் அமைக்க வந்த அலுவலர்களின் வாகனங்களை விவசாயிகள் நேற்று சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் நரிமணத்தி லிருந்து திருச்சி மாவட்டம் வாழ வந்தான் கோட்டையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு குழாய்கள் மூலம் கச்சா எண் ணெய் கொண்டு செல்ல விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கப் பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு ஆங்காங்கே விவசாயிகள் எதிர்ப் புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பூதலூர் அருகே வெண்டயம்பட்டியிலுள்ள விளைநிலங்களில் குழாய் பதிப்பதற்காகப் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. மேலும், சாலை யோரம் குழாய்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை எண் ணெய் நிறுவன அலுவலர்கள் பார்வையிடுவதற்காக நேற்று வந்தனர்.
இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அலுவலர்களின் வாகனங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ரா.ராமச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கக் கூடாது. விளைநிலங்களில் எரி வாயு குழாய் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும் என்பதால், சாலையில் ஒரு பக்கவாட்டில் அமைக்கும் வகையில் மாற்று திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனர்.
பேச்சுவார்த்தை: பின்னர் திருவையாறு டிஎஸ்பி சுபாஷ்சந்திரபோஸ், வருவாய் துறையினர் மற்றும் விவ சாயிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் குழாய் பதிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, புதிய ஆட்சியர் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை விவசாயிகள் திரும்பப்பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT