Published : 15 Jun 2021 03:15 AM
Last Updated : 15 Jun 2021 03:15 AM
வேலூர், திருப்பத்தூர், தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 539 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 45,577-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 196 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. நேற்று 293 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
தி.மலை
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 252 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 46,501-ஆக உயர்ந்துள்ளது. 43,720 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 2,250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 531-ஆக அதிகரித்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT