Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM
கடலூர் மாவட்டத்தில் நேற்று 319 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 54,877 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 721 பேர் உட்பட 50,160 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்தது உட்பட கடலூர் மாவட்டத்தில் இதுவரை 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 24,751 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று 6 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 304 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 40,341 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை 308 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT