Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 23-ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெறும். மக்கள் இணையதளம் மூலம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1430-ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி நடத்தவும், கிராமகணக்குகளை தணிக்கை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, 2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 2021 ஜூன் 30-ம் தேதிவரை வருவாய் பசலி ஆண்டுக்கான அனைத்துக் கணக்குகளும் சரி செய்து இறுதி செய்யப்பட உள்ளன. இதற்காக ஜூன் 23-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதிவரை (சனி, ஞாயிறு நீங்கலாக) ஜமாபந்தி நடைபெறும்.
தற்போது கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் நேரில் வந்து அளிக்க இயலாத நிலை உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிராம பொதுமக்களும் தங்களது கோரிக்கை மனுக்களை https://gdp.tn.gov.in/jamabandhi/ என்ற இணையதள முகவரியில் 2021-ம்ஆண்டு ஜூன் 12-ம் தேதி (நேற்று)முதல் ஜூலை 31-ம் தேதி வரைபதிவேற்றம் செய்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல திருவள்ளூர் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இணையவழி மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ வரும் ஜூலை 31-ம் தேதிவரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT