Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM
சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நேற்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தொடர்பான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் துறை அலுவலர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (கணக்குகள்) புஷ்பா, உதவி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) லோகேஸ்வரன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் முத்துபிரகாஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் குழந்தை தொழிலாளர் தின எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், தனித்துணை ஆட்சியர் ஜெயதீபன், தொழிலாளர் துணை ஆய்வாளர் கமலா ஆகியோர் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி தலைமையில் எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வித்யா, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் க.அ.முகம்மது, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT