Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 2021-2022-ம் ஆண்டுக்கு ரூ.3,850.45 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்துக்கு நடப்புஆண்டில் ரூ.3,850.45 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அதேபோல, மகளிர் குழுக்களுக்கு பல்வேறு கடன்களும், வணிக ரீதியான கடன்களும் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் வங்கிகள் கடன் இலக்கு நிர்ணயம் செய்வது வழக்கம்.
நடப்பு ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், துறை சார்ந்த விவரங்கள் அடங்கியுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக, இந்த ஆண்டுக்கு ரூ.3,850.45 கோடி கடன் திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.375.45 கோடி அதிகம். விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.2,722.50 கோடி, குறு மற்றும்நடுத்தர தொழில் துறை மேம்பாட்டுக்கு ரூ.485.10 கோடி, பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.642.85 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. எனவே,மாவட்டத்தில் தகுதியுடையவர்களுக்கு கடன் உதவிகளை வழங்கஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். மகளிர் திட்ட இயக்குநர் பாபு, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்ய ராஜா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT