Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கணக் கெடுக்கும் முதல்கட்டப் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தலா ரூ. 5 லட்சம் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தைக்கு18 வயது நிறைவடையும்போது, அந்த தொகை வட்டியோடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல, பல்வேறு சலுகைகளை தமிழக அரசுஅறிவித்துள்ளது.
தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலரை, அலைபேசியில் தொடர்புகொண்டு, பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் சேகரித்தனர். அதன்படி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரத்தில் தாய், தந்தையை இழந்த இரு சகோதரர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாராபுரம் கொண்டரசன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 10 மற்றும் 15 வயதுடைய குழந்தைகள் உட்பட மாவட்டம் முழுவதும் 21 குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை மாநில சமூகபாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT