Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களிடம் நுண்நிதி நிறுவ னங்கள் கடன் தவணையை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது, போதுமான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ‘நுண்நிதி நிறுவனங்கள்’ கரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடம் கடன் வசூலிப்பதை சில வாரங்களுக்கு தள்ளி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து பேசும்போது, "கரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால், பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பாதிக்காத வகையில் தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், மகளிர் சுய உதவிக்குழுக்கள், சுய தொழிலுக் காக பெற்றுள்ள கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என நுண் நிதி நிறுவனங்கள் (மைக்ரோ பைனான்ஸ்) தங்கள் களப்பணியாளர்கள் மூலம் கடன் தவணையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.
பேரிடர் காலத்தில் வீடுகளுக்கே நேரில் சென்று கடன் தவணையை உடனே கட்ட வேண்டும் என யாரிடமும் நிர்பந்திக்கக் கூடாது. கரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களிடம் மென்மையான போக்கினை கடைப்பிடிக்க வேண் டியது அவசியமாகும்.
2 அல்லது 3 மாதங்களில் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தக்கூடாது. பொதுமக்கள் சிரமப்படுவதை நிதிநிறுவனங்கள் தவிர்க்க வேண் டும். பேரிடர் காலத்தில் பொது மக்கள் மேலும் பாதிப்புக்குள்ளா காமல் இருக்க அனைத்து நிதி நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’என்றார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, காணொலி காட்சி வாயிலாக ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் தாமோதரன், திருப்பத்தூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், உதவி திட்ட அலுவலர்கள், நுண் நிதிநிறுவனங்களின் பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment