Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

விழுப்புரம்

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்புமாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இதேபோல் அரகண்டநல்லூர் வடகரைத் தாழனூர், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 101 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே.ராமசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி. சரவணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் எஸ்.விஜய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.அஞ்சாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x