Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா மொபைல்போனில் பேசிய உரை யாடல் வெளியாகியுள்ளது.
இதில், `` வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால் முக்குலத்தோர் வாக்குகளை இழந்தோம். இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற முடியவில்லை. தற்போது கட்சி தலைமை இல்லாமல் இருக்கிறது. தலைமை ஏற்க வரவேண்டும்'' என வின்சென்ட் ராஜா சசிகலாவிடம் கூறியுள்ளார்.
அதற்கு, `வருவேன், எல்லாருடைய மனக்குமுறலும் தெரிகிறது, நானும் வருத்தத்தில்தான் உள்ளேன். தொண்டர் களுக்கு கடிதம் எழுதலாம் என்றால், கரோனா காலமாக இருப்பதால் சிரமம். அதனால்தான் ஒவ்வொருவரிடமும் போனில் பேசி வருகிறேன்' என சசிகலா பதிலளிக்கிறார். உங்களிடம் பேசியதால் என்னை கட்சியில் இருந்துநீக்கினாலும் பரவாயில்லை. அதிமுகவைப் பாதுகாக்க வேண்டும் என்றால் உங் களைப் போன்ற தலைமை வேண்டுமென வின்சென்ட் ராஜா கூறு கிறார்.
அதையடுத்து, `நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கட்சியை நல்ல முறையில் வழிநடத்தி, மக்களுக்கு நல்லது செய்ய ஆசை. ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என சசிகலா கூறுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment