Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட் : சங்க ஆலோசனை கூட்டம் :

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட் முன்னேற்ற நலச் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சங்க செயலாளர் செந்தில், பொருளாளர் கோட்டையன் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில், 126 சில்லறை விற்பனை கடைகள், 126 மொத்த வியாபார கடைகள் உள்ளன. கரோனா தொற்று காரணமாக மார்க்கெட் திறக்க அனுமதிக்காத நிலையில் மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரம் கடைகளை வைத்துக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x