Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

கரோனா தொற்று பாதிப்புக்கு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு : மகன் இறந்த ஒரு வாரத்தில் சோகம்

திருப்பூர்

கரோனா தொற்றால் மகன் இறந்த ஒரு வாரத்தில் தந்தையும், ஊத்துக்குளி காவல் உதவி ஆய்வாளருமான கோபாலனும் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

ஊத்துக்குளி காவல் நிலையஉதவி ஆய்வாளர் கோபாலன் (58).கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு மகன், மகள் இருந்தனர். கடந்த மாத இறுதியில் தம்பதி மற்றும் மகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். பெருந்துறை ஐஆர்டிடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டிருந் தனர். இதில் குணமடைந்து மனைவி விஜயகுமாரி வீடு திரும்பினர். கோபாலனும், மகன் சரண்(எ) சரவணனும் (23) தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த27-ம் தேதி சரண் உயிரிழந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று கோபாலனும் உயிரிழந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். மகன் இறந்த ஒரு வாரத்தில் தந்தையும் உயிரிழந்திருப்பது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x