Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த நாளை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஏற்பாட்டில் காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக நகரச் செயலர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலரும், உத்திரமேரூர் எம்எல்ஏ-வுமான க.சுந்தர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்க உறுப்பினர்கள் 300 பேர், தமிழ்நாடு சூரியகுலம் வண்ணார் சங்க உறுப்பினர்கள் 150 பேர், அமீது அல்லிய நகர் குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் 125 பேர், ஒலிமுகமதுபேட்டை இளைஞர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் 125 பேர் என மொத்தம் 700 பேரின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT