Published : 06 Jun 2021 03:13 AM
Last Updated : 06 Jun 2021 03:13 AM
கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங் களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.நேற்று அந்தந்த பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு சென்ற போது, போதுமான தடுப்பூசி இல்லாததால் திரும்பிச் சென்றனர்.
கரோனா பரவலின் 2-ம் அலை யைத் தடுத்திட தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த ஆயுதம் என்று அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால், தற்போது தடுப்பூசிக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 5 மாதங்களாக கடலூர்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தடையின்றி பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவந்தது. இதற்கிடையே கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதிய தடுப்பூசி களை அரசு ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.
நேற்றுக் காலை நிலவரப்படி மாவட்டத்தில் 840 டோஸ் கோவாக் சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு இருந்தது.இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி களை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் கரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படவில்லை.
ஆனால் கடலூர் வட்டாரத்தில் இரண்டு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த இரண்டு மையங்களுக்கும், கம்மாபுரம், சிவக்கம், மங்களூர், நல்லூர், மருங்கூர், பண்ருட்டி, நடுவீரப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக மட்டுமே தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் தடுப்பூசி செலுத் துவதற்கான இணையதளத்தில் பதிவு செய்திருந்த பொதுமக்கள் வழக்கம் போல அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்ற நிலையில் அவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியாமல் திரும்பி வந்தனர்.
மாவட்டத்தில் இதுவரையில் 2.33 லட்சம் பேர் தடுப்பூசி செலுத் திக்கொண்டனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 4 ஆயிரம் பேர் வரையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், முதல் தவணையில் செலுத்தப்பட்ட ஊசி இரண்டாவது தவணையில் கிடைக்காமல் ஏராளமானவர்கள் தினந்தோறும் அரசு மருத்துவ மனைக்கு வந்து விசாரித்து செல்லும் நிலையே உள்ளது.
இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், நேற்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் மூலம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.அந்த முகாம்களில் கூட தடுப்பூசி செலுத்த, அண்டை மாவட்டங்களில் இருந்து கடனாக தடுப்பூசி பெறப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் ஆர்வமுள்ள அளவிற்கு இருப்பு இல்லாததால் 9 மணிக்கு தடுப்பூசி போடத் தொடங்கும் நிகழ்வுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பே பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது," அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் தடுப்பூசி பெறப்பட்டு செலுத்தப் படுகிறது. தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டுவ தால், பற்றாக்குறை உள்ளது. நிலைமை ஓரிரு நாட்களில் சரியா கும் என நம்பிக்கை உள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT