Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM
கரோனா தொற்று சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் கட்டணம் வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தொடர்புடைய தனியார் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காக வழங்கப்பட்ட அனுமதி நேற்று ரத்து செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த ஆண்டிபாளை யத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (62). கடந்த மே 3-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 9-ம் தேதி உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு, ஒரு ரெம்டெசிவர் மருந்தின் விலை ரூ.40 ஆயிரம் வீதம் கட்டணம் நிர்ணயித்து, 5 மருந்து குப்பிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் உறுதி செய்யப்பட்டு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி தனது குடும்பத்தினரை அலைபேசி மூலமாக சுப்பிரமணியம் அழைத்துள்ளார். தனக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகவும், நீண்டநேரம் சத்தம் போட்டும் யாரும் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் மருத்துவமனை செவிலியர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பிறகு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் சென்றபோது, ஆக்சிஜன் இருப்பு குறைவாக இருப்பதால் சுப்பிரமணியத்தை அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி, கடந்த 25-ம் தேதி சுப்பிரமணியம் உயிரிழந்தார். இதற்கிடையே, ரசீது எதுவும் அளிக்கப்படாமல் மருத்துவமனை தரப்பில் ரூ.19 லட்சத்து 5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக மாவட்ட சுகாதார இணை இயக்குநர் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார்.
கண்காணிப்பு தீவிரம்
கரோனா வைரஸ் தொற்று காலத்தில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களிடம் இருந்து சேவைமனப்பான்மையுடன் பெற வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம்மற்றும் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது" என்றார்.
மருத்துவத் துறையினர் கூறும்போது, "மருத்துவமனையில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மட்டுமே, தொடர்ந்து சிகிச்சையில் இருப்பார்கள். இவர்களுக்கான சிகிச்சை முடிந்ததும், புதிய தொற்றாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படமாட்டார்கள்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT