Published : 05 Jun 2021 03:13 AM
Last Updated : 05 Jun 2021 03:13 AM

திண்டுக்கல் அருகே கரோனா சிகிச்சைக்கு ஆட்டோவில் சென்றவர் விபத்தில் மரணம் :

வத்தலகுண்டு: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சின்ன கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (50). இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கரோனா அறிகுறியாக இருக்கலாம் என நினைத்து, அவரது மனைவி ஜெயா, ஆட்டோவில் வத்தலகுண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். பட்டிவீரன்பட்டி சாலையில் எம்.வாடிப்பட்டி அருகே ஆட்டோ சென்றபோது சாலையில் முன்னே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியது. இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ, சென்னையில் இருந்து பட்டிவீரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில்

விபத்து தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x