Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு - மனநல ஆலோசனை வழங்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை :

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி சார்பில் மருத்துவஅலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக கரோனா தொற்று தொடர்பான தகவல்கள், தனிமை படுத்தப்பட்டநபர்களை கண்காணித்து, அவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை, திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலங்களுக்கு போயம்பாளையத்திலும், 3 மற்றும் 4-வது மண்டலங்களுக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலும் செயல்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலங்களுக்கு 0421-2321520 என்ற எண்ணிலும், 3 மற்றும் 4-வது மண்டலங்களுக்கு 0421- 2321500 என்ற தொலைபேசி எண்ணிலும் ஒரே நேரத்தில் 40 அழைப்புகளுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாக வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்கப்படுகிறது

மனநல ஆலோசனை மையம் வாயிலாக, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குகரோனா தடுப்பூசி, மருத்துவ அவசர உதவி, கரோனா தொற்று, இதர மருத்துவ நோய்கள், கரோனா தொற்று பரிசோதனை, மருத்துவமனைகள் விவரம் மற்றும் கோவிட் பாதுகாப்பு மையங்கள், கரோனா தொற்று பாதித்தவர்களுக்கான மருந்துகள், தொற்று உள்ளபகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்தல்,வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்றவற்றுக்கான தகவல்களும்மற்றும் மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x