Published : 03 Jun 2021 03:14 AM
Last Updated : 03 Jun 2021 03:14 AM
திருப்பத்தூர் அருகில் உள்ள டி.முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (58). பர்கூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுஜாதா (48). இவர்களுக்கு தீபக் (29), தீப்தி (26) என மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டதால், அவர்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர். சுஜாதா அழகு கலை நிலையம் நடத்தி வந்தார்.
புருஷோத்தமனும், சுஜாதாவும் டி.முத்தம்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சுஜாதாவுக்கு கர்ப்பப்பை கோளாறு இருந்து வந்தது. மேலும், இவர்களுக்கும் மகன் தீபக்குக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் சுஜாதாவுக்கு கர்ப்பப்பை பிரச்சினைக்கு சிகிச்சைப் பெற பர்கூரில் உள்ள மருத்துவமனைக்கு புருஷோத் தமன் அழைத்து வந்தார். மருத்துவமனையில் மருத்துவர் இல்லா ததால், காவல் நிலையம் பின்புறம் உள்ள பழைய காவலர் குடியிருப்பில் மனைவியை விட்டுவிட்டு, புருஷோத்தமன் வேலைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் மதியம் குடியிருப்புக்கு சென்று பார்த்தபோது, அங்கு சுஜாதா புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீஸார், சுஜாதாவின் உடலை மீட்டனர். நேற்று முன்தினம் இரவு டி.முத்தம்பட்டியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த புருஷோத்தமன், மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விரக்தியில் எதிரே உறவினர் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை மீட்ட போலீஸார், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்எஸ்ஐ மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment