Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு :

விழுப்புரம்

கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் https;//ucc.uhcitp.in/ngoristration என்ற இணைய முகவரியில் பதிவு செய்து இப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் தகவல்களுக்கு மாவட்டங்களில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 04146-222288. மேலும், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் dswovillupuram@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம் என்று விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x