Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்செ.முத்துக் கண்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில்,"திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கடந்த 9-ம் தேதி முதல் கரோனா தடுப்பு உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
முதல் அலை கால கட்டத்தில், இந்த அளவுக்கு கரோனாதொற்று பாதிப்பு இல்லை. ஆனால், தற்போது தொற்று பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், மக்களுக்கு முன்னெச்சரிக்கை, தற்காப்பு நடவடிக்கை, தொற்று பரிசோதனை, தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மருத்துவஉதவிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, இந்த மையத்தின் மூலம் சேவை பணி செய்து வருகிறோம்.
இந்நிலையில், மாவட்டத் தில் பரிசோதனை அளவை நாளொன்றுக்கு 10 ஆயிரம் வரை உயர்த்தவேண்டும். பரிசோதனை செய்தவர்களுக்கு 24 மணி நேரத்தில் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
தினமும் தடுப்பூசி அளவை 8 ஆயிரம் டோஸ் என்ற அளவு உயர்த்தி வழங்க வேண்டும். தடுப்பூசி மையங்கள் குறித்த தகவல்களை பத்திரிகைகளில் தினசரி அறிவிக்க வேண்டும்.காய்ச்சல் கண்டறியும் முகாம்,நோய் தொற்று கண்டறியும்முகாம் ஆகியவற்றை கிராமம்,நகர்ப்புற பகுதிகளில் பரவலாகநடத்த வேண்டும்.
ரேஷன் கடைகள் மூலமாக தரமான பொருட்களைமுழுமையாக மக்களுக்கு வழங்க வேண்டும். மடத்துக்குளம், பொங்கலூர், சேவூர்,கரடிவாவி, ஜல்லிபட்டி அரசுமருத்துவமனைகளை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT