Published : 30 May 2021 03:13 AM
Last Updated : 30 May 2021 03:13 AM
தியாகதுருகத்தைச் சேர்ந்த திமுக மூத்த நிர்வாகி மிசா பொன்.ராமகிருஷ்ணன் (96). நேற்றுஅவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் க.பொன்முடி, மஸ்தான் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திக்கேயன், ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,“தியாகதுருகம் பேரூர் திமுக செயலாளரும், கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான மிசா.பொன். ராமகிருஷ்ணன் வயது முதிர்வின் காரணமாகஇயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து வேதனை யடைந்தேன்.
முன்னாள் முதல்வர் அண்ணா, கருணாநிதி ஆகியோிடத்தில் பேரன்பும், பெரும் பற்றும் கொண்டிருந்த பொன்.ராமகிருஷ்ணன், மிசா காலத்தில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்தவர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், தியாகதுருகம் ஒன்றியப் பெருந்தலைவராகவும், கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் அரும் பணியாற்றியவர். 2018-ம்ஆண்டு விழுப்புரத்தில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் அவருக்கு அண்ணா விருதினை வழங்கிச் சிறப்பித்த நினைவு இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை. அத்தகு சிறப்புடைய மிசா.பொன். ராமகிருஷ்ணன் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT