Published : 24 May 2021 03:11 AM
Last Updated : 24 May 2021 03:11 AM
ஊரடங்கு காலத்தில் காய்கறி,பழங்கள் தேவைப்பட்டால் வேளாண் அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்புகொள்ள ஏதுவாக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்டஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கரோனா தொற்று காரணமாக தளர்வுகளற்ற பொது முடக்கம்அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், நீலகிரி மாவட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த விளைபொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது வாகனப் போக்குவரத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.விவசாயிகளின் விளைபொருட்கள் கிடைப்பதில் ஏற்படும்பிரச்சினைகளுக்கு மாவட்டநிர்வாகத்தின் துணையோடு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக உரிய தீர்வு காணப்படும்.
பொது ஊரடங்கின் காரணமாக அவரவர் இருக்கும் இடத்திலேயே காய்கறிகள் மற்றும் பழங்களை நடமாடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை மையம் மூலம் மக்கள் பெற்றுக்கொள்ள மாவட்டநிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதில் ஏதேனும்இடையூறு இருந்தாலோ, ஏதேனும் குறிப்பிட்ட பகுதிக்கு காய்கறிகள் தேவைப்பட்டாலோ, 0423-2449760 என்ற உதவி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5மணிக்குள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT