Published : 24 May 2021 03:11 AM
Last Updated : 24 May 2021 03:11 AM

விழுப்புரம் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் - இன்று முதல் காய்கறிகள் விற்பனை தொடர்பு எண்கள் வெளியீடு : மாவட்ட ஆட்சியர் தகவல்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் இன்று முதல் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் விற்பனைக் குழு மூலம் இயங்கும் விவசாய ஆர்வலர் குழுக்கள்,விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மகளிர் சுய உதவிக் குழுக்கள்,காய்கறி உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயிகள், உழவர் சந்தை மூலம்விற்பனை செய்யும் விவசாயிகள் மற்றும் நகர்புறங் களில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் நடமாடும்வாகனங்கள் மூலமாக இன்று முதல் ஊரடங்கு முடியும் வரை தங்குதடையின்றி விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட அளவில், வேளாண் இணை இயக்குநர் 94424 14005, தோட்டக்கலை துணை இயக்குநர் 94430 01793, வேளாண்மை துணைஇயக்குநர் (வேளாண் வணிகம்) 94437 87717 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

வட்டார அளவில் வசிப்பவர்கள் தோட்டக்கலை அலுவலரை கோலியனூர் - 9943072887, காணை 9940801374, விக்கிரவாண்டி 9500761196, மயிலம் 9791070478, முகையூர் 9791590586, கண்டமங்கலம் 8883564586, வானூர்9976196911,மரக்காணம் 9943072887, திருவெண்ணை நல்லூர் 9786723118, செஞ்சி 9791171116, மேல்மலையனூர் 8760969905, ஒலக்கூர் 9994716499, வல்லம் 9994716499 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதே போல் வேளாண் அலுவலர்களை கோலியனூர் 9443771455,காணை 9976885331, கண்ட மங்கலம் 9442486049, விக்கிரவாண்டி 9443778776, வானூர்9443577132, மயிலம் 9344374558, ஒலக்கூர் 9976126021, மரக்காணம் 9443050514, செஞ்சி 9442238550,வல்லம் 9444573720, மேல் மலையனூர் 9486985445, முகையூர் 9442395592, திரு வெண்ணைநல்லூர் 9442982172 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x