Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM

காணைக்குப்பம் நேரடி கொள்முதல் நிலையத்தில் - மழையில் நனைந்து வீணாகிய நெல் மூட்டைகள் :

விழுப்புரம் அருகே காணைக்குப்பம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள். தேங்கிய மழை நீரை வாரி இறைக்கும் விவசாயிகள்.

விழுப்புரம்

காணைக்குப்பம் நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகின.

விழுப்புரம் மாவட்டத்தில் 22 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில்நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் சேமிப்புக் கிடங்குகள் இல்லை. இதனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும், விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளும் திறந்தவெளியில் வைக்கப்படுகின்றன. ஒரு சில இடங்களில் மட்டுமே தார்பாய் மூலம் மூட்டைகளை மூடி வைக்கின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் அருகே காணைக்குப்பம் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் தார் பாயால் சரிவர போர்த்தி வைக்காமல், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையால், நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து வீணாகின.திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டதால், கனமழைக்கு தாழ்வுப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், நெல் மூட்டைகள் அதிகளவில் நீரில் நனைந்து வீணாகின. இதையடுத்து விவசாயிகள் தேங்கிய தண்ணீரை வாரி இறைத்தனர்.தற்போது அந்த மூட்டைகளைப் பரப்பி வெயிலில் காய வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: சேமிப்புக் கிடங்கு இல்லாதது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் எடுத்துச் செல்லாதது போன்ற காரணங்களால் மழையில் நெல் மூட்டைகள் வீணாகி வருகின்றன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x