Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM

தேனியில் 24 மணி நேரமும் கரோனா ஆலோசனை தரும் மருத்துவக் குழு :

தேனி: தேனி மாவட்டத்தில் கரோனா அறிகுறிகள், மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மையங்களின் விவரம், பரிசோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள், தடுப்பூசி செலுத்தப்படும் இடம் போன்ற பல்வேறு தகவல்களைப் பெறவும், தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை பெறவும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறப்பு மருத்துவக்குழு 24 மணி நேரமும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது. இக்குழுவை 94999 33869 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என்று ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x