ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 22 May, 2021 03:12 AM
Published : 22 May 2021 03:12 AM Last Updated : 22 May 2021 03:12 AM
தேனி: கரோனா ஊரடங்கால் டீக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் பால் பயன்பாடு குறைந்துவிட்டது. தேனி மாவட்ட ஆவின் நிர்வாகமும் பால் கொள்முதலை குறைத்துக் கொண்டது. இதனால் கால்நடை வளர்ப்போர் கறந்த பாலை சந்தைப்படுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி அருகே பள்ளபட்டியைச் சேர்ந்த விவசாயி சீனிராஜ், தான் வளர்க்கும் மாடுகளிடமிருந்து கறந்த பாலை கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி கிராமங்களில் ஏழை எளியோருக்கு இலவசமாக வழங்கி வருகிறார். நேற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகளுக்கு 40 லிட்டர் பாலை இலவசமாக வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT